தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறையானது இயக்குநர் இல்லாமல் இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கல்வித்துறைக்கு இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விடியா திமுக அரசு பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தவரை மிகவும் மோசமான செயல்பாட்டினையே நிகழ்த்திவருகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்த்தாளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதவரவில்லை. பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு இருபத்தி நான்காயிரம் மாணவ மாணவிகள் எழுத வரவில்லை. மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கவில்லை. மிதிவண்டிகள் வழங்கவில்லை. எல்கேஜி வகுப்புகளை ரத்து செய்துள்ளது. மேலும் கல்வி வளர்ச்சியில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாடு மிகுந்த பின்னடைவினை சந்தித்துள்ளது என்று கல்வியலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் இடைநிலை ஆசிரியர்கள், டெட் தேர்வு எழுதி இதுவரை நியமனம் செய்யாதவர்கள் என்று தொடர்ந்து திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
திமுக அரசானது பொறுப்பேற்ற உடன் முதல் மாதத்திலேயே பள்ளிக்கல்வி துறையின் முழு அதிகாரங்களையும் இயக்குநரிடம் இருந்து பறித்து ஆணையர் பதவி ஒன்றினை நியமித்து, முழு அதிகாரத்தையும் ஆணையருக்கு வழங்கியது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக இயக்குனர் பதவியில் இருந்த அதிகாரம் ஆணையர் பதவிக்கு மாறியது அரசு அதிகாரிகளிடம் மிகுந்த அதிர்ச்சியினையும் பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் தந்தது. மேலும் இந்த அறிவிப்பு பல்வேறு அரசியல் கட்சிகள் இடையேயும், ஆசிரியர் சங்கங்களிடையையும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர் பதவி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது பள்ளிக் கல்வித்துறையின் இயக்குனராக தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் அறிவொளி நியமிக்கப்பட்டிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு இறுதியாக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குனராக இருந்த முனைவர் கண்ணப்பன் தொடக்க கல்வியின் இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.