தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறையில இயக்குநனர நியமிக்காததால, புதுசா மருந்தகம் வைக்கிறதுக்கும், மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள தயாரிக்கவும், மருத்துவ உபகரணங்கள ஏற்றுமதி செய்யவும் அனுமதி கிடைக்காம 700க்கும் மேலாண விண்ணப்பங்கள் தேங்கிக் கிடக்குதாம்.
வழக்கமாக மருந்தாளுநர் படிப்ப முடிச்சு, ஐந்தாண்டு அனுபவம் உள்ள அதிகாரியத்தான் மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குநரா நியமிப்பாங்க… ஏற்கனவே இந்த பதவியில இருந்த விஜயலட்சுமிங்கிறவங்க ஓய்வு பெற்ற பிறகு உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் லால்வீனாவ, கூடுதல் பொறுப்பா இதையும் பாக்கச் சொல்லியிருக்காங்க. ஆனா, ஐ.ஏ.எஸ். அதிகாரிங்கிறதால அவரால நேரடியா அனுமதி எதையும் கொடுக்க முடியாதாம்.
இதப்பத்தியெல்லாம் சிந்திக்காம தமிழக அரசும், மருத்துவத்துறையும் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துல தான் கவனம் செலுத்திக்கிட்டு இருக்காங்களாம். இப்ப என்னடான்னா, மருந்து கட்டுப்பாட்டுதுறை இயக்குநருக்கு கீழ, உரிமம் வழங்மய தனியா குழு அமைக்கப்படும்னும், இந்த குழுவினர் எந்த சமரசத்துக்கும் இடமளிக்காமல் விண்ணப்பித்தவர்களுக்கு உரிமம் வழங்குவாங்கன்னும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவிச்சிருக்காரு…
விடியா திமுக அரசு அமைச்ச குழுக்களோட நிலையே இதுவரைக்கும் என்னனு தெரியல… இப்ப என்னடான்னா புதுசா ஒரு குழு அமைக்கப் போறாங்களாம்… அதுவும் இல்லாம, அந்த குழு எந்த சமரசத்துக்கும் இடம் அளிக்காதுன்னு வேற சொல்லியிருக்கிறதுதான் சந்தேகத்த கிளப்பியிருக்கு… அப்ப இவ்வளவு நாளா அனுமதி வழங்குறதுலயும் கமிஷன் கலெக் ஷன் இருந்துச்சா… அதிகார மையங்களுக்கு இந்த கலெக் ஷன சரியா வாங்கித்தர்ற ஆள் கிடைக்காமத்தான் இயக்குநர் பதவிய நியமிக்காமலேயே இருக்காங்களான்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.