பணி மாறுதல் பெற்று செல்லும் ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என பள்ளிகல்வித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் பணியிடத்துக்கு மட்டுமே மடிக்கணினி என்றும் ஆசிரியர்களுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளது. பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் பெற்று செல்லும் ஆசிரியர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் மடிக்கணினிகளை பணியாற்றிய தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இதனை பெற்ற தலைமை ஆசிரியர் அதனை பாதுகாப்பாக வைத்து புதியதாக பணியில் சேரும் ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.