தினசரி கதாநாயகன் சின்னதம்பியை காட்டிற்குள் விடுவதுதான் நோக்கம் -திண்டுக்கல் சீனிவாசன்

பசுமை போர்வையில், தமிழகம், இந்தியாவிலேயே முன்னிலையில் இருப்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டப்பேரவை கூடியதும், கேள்வி நேரத்தில், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் எழுப்பிய கேள்விக்கு, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்தார். அப்போது, மாநில அரசின் பல்வேறு மர வளர்ப்பு திட்டங்களின் மூலம், தமிழகத்தில் பசுமை போர்வையின் பரப்பளவு அதிகரித்திருப்பதாக கூறினார். அதன்படி, 2011ஆம் ஆண்டு 21 புள்ளி 7 6 சதவீதமாக இருந்த பசுமை போர்வையின் பரப்பளவு, தற்போது 23 புள்ளி 5 7 சதவீதமாக உயர்ந்திருப்பதாக சுட்டிக் காட்டிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இதனால் இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலையில் இருப்பதாக பெருமிதத்துடன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தினசரி கதாநாயகன் சின்னதம்பியை காட்டிற்குள் மீண்டும் விடுவது மட்டுமே அரசின் நோக்கம் என்று கூறினார்.

Exit mobile version