திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களின் நேர்த்திகடனை செலுத்தினர். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி பூத்த மலர் அலங்காரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அவதாரங்களில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந் நிகழ்ச்சியின் 16-வது நாளான இன்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பல்வேறு வேடங்கள் அணிந்தும் பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.