அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் கலந்துகொண்ட கூட்டத்திற்கு, பணம் கொடுப்பதாக கூறி பெண்களை அழைத்து வந்து ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.
சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வெற்றிவேல் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, தேர்தல் பனிமனை துவக்கி வைக்க தினகரன் வந்தார். இந்த கூட்டத்திற்கு பணம் கொடுப்பதாக கூறி ஏராளமான பெண்களை அமமுகவினர் அழைத்து வந்துள்ளனர். காலை 10 மணிக்கு வருவதாக கூறிய தினகரன் பிற்பகல் 2 மணிக்கு தான் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தார். இதனால் கொளுத்தும் வெயிலில் பெண்கள் நீண்ட நேரம் காத்துக் கிடந்துள்ளனர். கூட்டத்திற்கு பின் அந்த பெண்கள் அமமுக நிர்வாகிகளான லஷ்மணன், இருளாண்டி, பாபு, கர்ணா, ஆகியோரிடம் கூட்டத்திற்கு 300 பெண்களை அழைத்து வந்ததாக கூறி பணம் கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் அதை மறுத்த அமமுகவினர் 80 பேர் மட்டுமே வந்திருந்ததாக கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
Discussion about this post