தற்கொலை செய்து கொண்ட டிஐஜி-க்கு ஓ.சி.டி வகை மன அழுத்தமா? ஓ.சி.டி என்றால் என்ன?

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக அளவில் பெருத்த அதிர்வலையினை ஏற்படுத்தி உள்ளது. காலையில் நன்றாக நடைப் பயிற்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய அவர், திடீரென இத்தகைய முடிவினை எடுப்பதற்கு என்னதான் காரணம் என்று யாருக்கும் சரியாகப் புலப்படவில்லை. ஆனால் அவருக்கு சில நாட்களாக மன அழுத்தம் இருந்ததாகவும் அதனால்தான் இந்தத் தவறான முடிவை எடுத்துவிட்டார் என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். இல்லை அவர் தனது பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை வைத்து சுட்டு இருந்ததால் இது தற்கொலைதானா? என்று இன்னொரு சாரார் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஓ.சி.டி வகை மன அழுத்தமா?..!

இறந்துபோன டி.ஐ.ஜி கடந்த இரண்டு வருடங்களாக ஓசிடி வகை மன அழுத்தத்தில் இருந்ததாக தமிழக கூடுதல் டி.ஜி.பி அருண் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும் டி.ஐ.ஜி விஜயகுமார் தனக்கு நெருக்கமானவர் என்றும், அவரது பெர்சனல் மருத்தவரிடம் தொடர்புகொண்டு இதுகுறித்து விசாரித்ததில் இரண்டு வருடங்களாக ஓசிடி வகை மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்கான மருந்துகள் தொடர்ந்து உட்கொண்டார் என்றும், தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு சிறப்பாகத்தான் இருந்தது என்றும் டி.ஜி.பி அருண் தெரிவித்திருந்தார்.

ஓ.சி.டி என்றால் என்ன?

ஓசிடி என்பது பெரு விருப்ப கட்டாய மனப்பிறழ்ச்சி ஆகும். இதனை ஆங்கிலத்தில் அப்சசிவ் கம்பல்சிவ் டிசாடர் ஆகும். அதாவது ஒரு எண்னம் வந்தால் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கும். இதைக் கட்டுப்படுத்த முடியாதபோது அது மன அழுத்தமாக மாறிவிடுகிறது. இந்த வகையான மன அழுத்தத்துக்கு மாத்திரை மற்றும் கவுன்சிலிங் மூலம் குணப்படுத்த முடியும். ஒரு செயலை செய்துமுடிக்க வேண்டும் என்று நினைத்து அந்த செயலில் ஈடுபடும்போது அதை செய்து முடிக்கவில்லை என்றால் அதையே நினைத்துக்கொண்டு இருப்பதால் அது மன அழுத்தமாக மாறிவிடும். மேலும் இவர்களுக்கு தங்களைப் பற்றிய தாழ்வுமனப்பான்மை அதிகமாக இருக்கும்.  இதில் பாதிக்கப்பட்டவர்கள் சரியாக சாப்பிடமாட்டர்கள். கலகலப்பாக பேசமாட்டார்கள். இறுக்கமாகவே முகத்தை வைத்திருப்பார்கள். தெரிந்தவர்களைப் பார்த்தால் கூட பேசவேண்டுமே என்று பேசுவார்கள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கைகளைக் கழுவுவார்கள். ஆனால் இது ஓசிடியின் ஆரம்பக்கட்ட நிலைதான். இதைத் தவிர இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்தவர்களை காயப்படுத்தும் எண்ணம், சுயக்கட்டுப்பாடின்மை, தேவையற்ற பாலுணர்வு சிந்தனைகள் போன்றவை தோன்றும். பயம் மற்றும் கவலை இரண்டும் பெருகி தினசரி வேலைகளைக் கூட செய்வதற்கு முடியாமல் திணறுவார்கள். இதனை நாம் மனநோய் என்று கருதாமல் அவர்களை சாதாரண மனிதர்களாக பாவிக்க வேண்டும். அவர்களின் மன அழுத்தத்தினைக் குறைப்பதன் மூலம் அவர்களின் இந்த நிலையை நாம் மாற்றி அமைக்க முடியும்.

கோவை டி.ஐ.ஜி இறப்பில் எழும் சந்தேகங்கள்!…

ஓசிடி மன அழுத்தம் என்று டிஜிபி அருண் கூறியுள்ளார். ஆனால் அதற்கான மருத்துவச்  சான்றினை இன்னும் அவர் வெளியிடவில்லை. அருகில் இருந்த கன்மேன் உடைய துப்பாக்கியை வாங்கிதான் சுட்டுள்ளார். ஆகவே இது தற்கொலைதானா என்கிற கேள்வியும் பலரிடம் வலுக்கிறது. கன்மேன்-இடமும் விசாரணைத் தொடர்கிறது என்று சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, காலையில் இறந்த டி.ஐ..ஜியின் உடலை அவசர அவரசமாக உடற்கூராய்விற்கு அனுப்பி பின் அவரது சொந்த ஊரான தேனிக்கு சென்று தகனம் செய்யப்பட்டுள்ளது. ஏன் இந்த அவசரம்? முழுமையான விசாரணைக்குப் பிறகு உடல் தகனம் நடந்திருக்கலாமே? என்று பல தரப்பில் இருந்து கேள்வி எழுப்புகின்றனர்.

 

News :

தொடரும் காவலர்களின் தற்கொலைகள்! டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலையின் பின்னணி என்ன?

https://newsj.tv/dig-vijayakumar-suicide-what-issue/

Exit mobile version