டி.ஐ.ஜி விஜயகுமாரின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு – எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

கோவை மேற்கு மண்டல முகாமில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டது அனைவரிடத்திலும் பெரிய அதிர்வையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயர நிகழ்விற்கு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கள் தெரிவித்துள்ளார். அதனை பின்வருமாறு காண்போம்.

எதிர்க்கட்சித் தலைவரின் இரங்கல் பதிவு:

கோவை சரக காவல்துறை டிஐஜி திரு.விஜயக்குமார் IPS அவர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை துவங்கி , பின்னர் நேரடியாக இந்திய காவல் பணிக்கு நேரடியாக தேர்வாகி, டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட பெருமைக்குரிய திரு.விஜயக்குமார் அவர்களின் பணி போற்றத்தக்கது. அவரின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு ,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த திரு.விஜயக்குமார் அவர்கள் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது, ஆகவே திரு.விஜயகுமார் IPS அவர்களின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

Exit mobile version