உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதில், சட்ட சிக்கல்கள் உள்ளதாக கூறி ஈரோடு மக்களவை வேட்பாளர் கணேசமூர்த்தி செய்தியாளர்கள் சந்திப்பை பாதிலேயே முடித்துக் கொண்டு புறப்பட்டார்.
ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில், மதிமுகவை சேர்ந்த கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, உங்களுக்கு சின்னம் ஒதுக்கியதில் பொதுச்செயலாளர் வைக்கோவிற்கு விருப்பமா இல்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தனக்கு உதய சூரியன் சின்னம் ஓதுக்கியது குறித்து யாரும் கேட்க வேண்டாம் என்று செய்தியாளர்களை அதட்டி பேசினார். சின்னம் ஒதுக்கியதில் சட்ட சிக்கல் உள்ளதாகவும், இது குறித்து தான் பேச தயாராக இல்லை எனவும் கூறி, செய்தியாளர்கள் சந்திப்பை பாதிலேயே நிறுத்திவிட்டு எழுந்து சென்றார். மேலும், இது போன்ற கேள்விகளுக்காகத்தான் நான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை எனத் தெரிவித்தார். அவரின் இந்த செயல் அங்கிருந்த செய்தியாளர்களை முகம் சுளிக்க வைத்தது.
Discussion about this post