தமிழகத்தில் ஒரு மாதத்துக்குப் பின் டீசல் விலை 19 காசுகள் குறைந்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் டீசல் தற்போது 94.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நாடு முழுவதும், கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியது. இந்த நிலையில், கடந்த 5 நாட்களாக, தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை ஒரு லிட்டர் பெட்ரோல், 99 ரூபாய் 47 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இப்போது டீசல் விலை, ஒரு மாதத்துக்குப் பின், லிட்டருக்கு 19 காசுகள் குறைந்துள்ளது.அதன்படி, இன்று காலை ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.
ஏற்கனவே, சமையல் எரிவாயு சிலிண்டர், கடந்த 8 மாதங்களில் மட்டும் 165 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு, தற்போது 877 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில், பெட்ரோல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி, டீசல் மட்டும் 19 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post