செல்போன்களை வைத்து கோலியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்த ஓவியர்

பழைய செல்போன்களின் உதிரிப் பாகங்களை வைத்து விராட் கோலியின் உருவப்படத்தை, விராட்டின் ரசிகரான ஓவியர் ஒருவர் தத்ரூபமாக வரைந்துள்ளார்.

இந்திய அணியில் முன்னணி வீரரும், தற்போது கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி செல்லும் விராட் கோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கோலி மீது வைத்துள்ள அளவு கடந்த அன்பால் சிலர், உடல் முழுவதும் அவரது உருவத்தை பச்சையாக குத்திக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், பழைய செல்போன்களின் உதிரிப் பாகங்களை பயன்படுத்தி, விராட் கோலியின் உருவத்தை தத்ரூபமாக அவரது ரசிகர் ஒருவர் வரைந்துள்ளார்.

கவுகாத்தியை சேர்ந்த ராகுல் பரேக் என்பவர், தேவைப்படாத செல்போன்களின் உதிரிபாகங்கள் மற்றும் வயர்களை கச்சிதமாக இணைத்து, அதன் மூலம் கோலியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்த ராகுல், விராட் கோலியை நேரில் சந்திந்து வரைந்த ஓவியத்தை அவரிடம் வழங்கி உள்ளார். ராகுலின் ஓவியத் திறனைக் கண்டு அசந்து போன விராட் கோலி, அதன்மேல் தனது ஆட்டோகிராப்பை பதிவு செய்தார்.

இதற்கிடையே, ராகுல் பரேக் கலைத்திறன் குறித்து ட்வீட் செய்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், இது ஒரு நிகரற்ற படைப்பு எனக் கூறியுள்ளது.

விராட் கோலியிடம் வாழ்த்து பெற்ற பிறகு ராகுல் பரேக் கூறுகையில், இந்த ஓவியத்தை வரைவதற்கு, எனக்கு மூன்று பகல் மற்றும் மூன்று இரவு தேவைப்பட்டது என்று கூறினார். இந்தியன் புக் ரெக்கார்ட்டில் என் பெயர் இடம் பெற்றுள்ளது என்றும் ஏஷியன் புக் ஆப் ரெக்காட்டில் வரவிரும்புவதாக தெரிவித்தார்.

Exit mobile version