05.04.2023 நேற்று நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் திருவிழாவினை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு குளத்தில் சாமியை 25 அர்ச்சகர்கள் நீராட்டினர். அதில் ஐந்து அர்ச்சர்கர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிகழ்வுத் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார். இவர்கள் இளம் வயதிலேயே உயிரிழந்திருப்பதை வேதனையளிக்கிறது. மேலும் அரசு அவர்களுக்கு அளிக்கும் என்று சொன்ன நிவாரணத்தொகை போதாது. அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என்று எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தினார். மேலும் இந்து அறநிலையத்துறை உரிய பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
Discussion about this post