பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தின் 45-வது நாளான இன்று, வரதராஜர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வைபவத்தின் 45-வது நாளான இன்று, தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். ஆகஸ்ட் 16 ஆம் தேதியோடு அத்திவரதர் வைபவம் முடிவடைய உள்ள நிலையில், வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்தாலும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
விழாவின் போது கூட்ட நெரிசல் ஏற்படா வண்ணமும் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நாளை மறுநாளுடன், அத்திவரதர் வைபவம் நிறைவடைந்த பிறகு, அத்திவரதரை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post