நோயாளியின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கண்டறியும் ஆடையை, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலுள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் சுஸ்மிதா, சண்மதி, வைஷாலி மற்றும் தனஸ்ரீ ஆகிய 4 பேர் சேர்ந்து நோயாளியைக் கண்காணிக்கும் ‘மீ அமிகோ’ எனும் பிரத்யேக ஆடையை வடிவமைத்துள்ளனர். இந்த ஆடையை நோயாளிகள் அணிவதன் மூலம், நோயாளியின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை மருத்துவர்கள் எளிதாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆடை பேருதவியாக அமையும் என மாணவிகள் தெரிவித்துள்ளனர். தாய்லாந்து நாட்டில் உள்ள Petcha buri stamp board சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் ‘பெண்களின் ஆற்றல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் சத்தியமங்கலம் மாணவிகளின் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசாக ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்பட்டது.
Discussion about this post