“சூப்பர்ஸ்டார்” தனுசுடன் பணியாற்ற ஆசை: பிரபல பாலிவுட் இயக்குநர்

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் தவிர்க்க முடியாத நாயகனாக திகழ்பவர் நடிகர் தனுஷ். கடைசியாக அவர் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “அசுரன்” படத்தை தொடர்ந்து அடுத்ததாக பட்டாஸ், இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்துள்ள தனுசுடன் இணைய விரும்புவதாக பாலிவுட் இயக்குநர் ஷமஸ் நவாப் சித்திக் கூறியுள்ளார்.

இவர் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக்கின் சகோதரர் ஆவார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சூப்பர்ஸ்டார்” தனுஷின் படங்களை பார்த்து முடித்துள்ளேன். ஒரு நடிகனாக அவர் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். நல்ல கதையுடன் விரைவில் அவருடன் கண்டிப்பாக இணைவேன்” என கூறியுள்ளார். 

Exit mobile version