ஒருமையில் பேசிய துணை வட்டார அலுவலர்!

புவனகிரி அடுத்த வடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியகுளத்தை தூய்மைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அதே கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான சந்திரமோகன் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல்களை கேட்டிருந்தார். இந்த நிலையில் குளத்தில் முறையான ஆய்வை மேற்கொள்ளாத மண்டல துணை வட்டார அலுவலர் தமிழ்ச்செல்வி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டுள்ள சந்திரமோகன் என்பவர் “மனநிலை சரியில்லாதவர்” என்று அவர் கைப்பட எழுதிய கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தை பெற்ற சந்திரமோகன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர போவதாக அறிவித்துள்ளார்.

Exit mobile version