பழமையான 2 கோவில் கல் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர் !

கடலூர் அருகே பழமையான இரண்டு கோவில் கற் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். சிதம்பரத்தில் உள்ள இளமையாக்கினார் கோயிலில், கடந்த 6 ஆம் தேதி சோமன மண்டபத்தின் ரிஷி கோபுரத்தில் இருந்த சுமார் முக்கால் அடி உயரம் கொண்ட கருங்கல்லாலான திருநீலகண்டன் மற்றும் ரத்தினா சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். தமிழக கோயில்களும், சிலைகளும் பாதுகாக்கப்பட்டு வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் தம்பட்டம் அடித்த கொள்கிறார். ஆனால் காணமல் கற்சிலைகள் குறித்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை கூறும் பொதுமக்கள் இதுதான் கோயில் சிலைகளை பாதுகாக்கும் லட்சணமாக என கேள்வி எழுப்புகின்றனர்.

Exit mobile version