நாட்டு மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலையறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் 12-வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை டி.ஜி.பி. சோனல் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பின்னர் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர் சக்தி தான் முக்கியக் காரணம் எனவும், நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் மேலாக 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் அடிப்படையிலேயே 2011 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருவதாகக் கூறினார்.