அமெரிக்காவில், குறைந்த விலை மற்றும் மறு வளர்ச்சி அடிப்படையில் கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்தார்.
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வாஷிங்டன் அலெக்ஸாண்ட்ரியாவில் குறைந்த விலை மற்றும் மறுவளர்ச்சி நுட்ப அடிப்படையில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் திட்ட மாதிரிகளை பார்வையிட்டார். அதன் பின் அவற்றின் தொழில் நுட்பங்கள் குறித்து, அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், உலக வங்கி அதிகாரிகள் மற்றும் வாஷிங்டன் வீட்டு வசதித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.