நிதிநிலை அறிக்கை தயாரிப்பது குறித்து துணை முதலமைச்சர் தீவிர ஆலோசனை

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், நிதிநிலை அறிக்கை தயாரிப்பது குறித்தும் அனைத்து துறை செயலர்களுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை, ஆண்டுதோறும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் 6 ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் மாதத்தில் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், தலைமைச் செயலர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அனைத்துத்துறை முதன்மை செயலர்கள் ஆகியோரின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழகத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை குறித்தும், வரவு செலவு கணக்கு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கையில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Exit mobile version