கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்ணாவின் சிலையை அவமதித்த செயலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், அண்ணா சிலையை அவமதிப்பு செய்தும், பீடத்தில் காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாக கண்டிப்பதாக பதிவு செய்துள்ளார். பொதுவாழ்வில் ஈடுபட்ட மற்றும் சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அஇஅதிமுக அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை விரைவில் எடுக்கும் என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post