தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 800 ஓட்டுநர்கள் பணியிடங்கள் காலியான நிலையில் உள்ளது. அதனை நிரப்புவதற்கு உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. அதாவது, தமிழக சுகாதாரத்துறையில் தற்காலிக அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட சரவணன், நெப்போலியன் உள்ளிட்ட 65 நபர்கள் தங்கள் பணியினை நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தையொட்டி இந்த இடைக்காலத் தடையினை நீதிமன்றம் விதித்துள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் துணிச்சலாக செயல்பட்டு பணியாற்றிய தங்களை பணி நிர்ந்தரம் செய்யவில்லை என்றும் மத்திய அரசாங்கம் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும்போது சுகாதாரத்துறையினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதையும் முன்வைத்து அவர்களின் கோரிக்கையானது இருந்தது.
பணி நிரந்தரம் செய்யக்கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை எள்ளளவும் விடியா திமுக அரசு மதிக்காமல் கிடப்பில் போட்டு இருக்கிறது. தற்காலிக பணியாளர்களை தவிர்த்து புதிதாக 800 பணியாளர்களை கொண்டு பணியிடங்களை நிரப்புவது ஏற்புடையது அல்ல என்றும் வழக்குத் தொடுத்தவர்கள் கூறிவருகிறார்கள். இவர்களின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பணியிடங்களை நிரப்புவதற்கு இடைக்கால தடையினை விதித்துள்ளது.