ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மினி பேருந்தை சிறைபிடித்து பக்தர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலின் முக்கிய திருவிழாவான ஆடி அமாவாசை திருவிழா கடந்த 31ஆம் தேதி நடைபெற்ற நிலையில் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல கடந்த 27ஆம் தேதி முதல் 1 தேதி வரை மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரிக்கு வந்த நிலையில், கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், பக்தர்கள் மினி பேருந்தை சிறைபிடித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post