பஞ்சாப் அணியை, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி அணி

ஐ.பி.எல் தொடரின் 11வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை, டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்ல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி, களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்க முதலே ஆதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மயங்க் அகர்வால் – கே.எல்.ராகுல் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 122 ரன்களை சேர்த்தது. இந்த ஜோடிக்கு பிறகு களமிறங்கிய பின்வரிசை வீரர்கள் ரன்களை குவிக்க தவறினர். இதனால், 200 ரன்களுக்கு மேல் பஞ்சாப் அணி ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் ((மட்டுமே)) எடுத்தது.

195 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியும் தொடக்க முதலே அதிரடி காட்டியது. பிரித்திவி ஷா 32 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஷிகர் தவான் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷிகர் தவான் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் மார்க்கஸ் ஸ்டோனிய்ஸ் அதிரடிக் காட்ட டெல்லி அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக, சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார்.)) இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

Exit mobile version