வீடுகளில் மின்சாரப் பயன்பாட்டை கணக்கெடுப்பதில் தாமதம்!

விடியா திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், 100 யூனிட் இலவசம், 500 யூனிட் வரை மானிய சலுகை கிடைத்தாத வகையில், ஊழியர்கள் கால தாமதமாக சென்று மின் கணக்கெடுப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஊழியர்கள் நேரில் செல்லாமல் முந்தைய மின் பயன்பாட்டை ஒப்பிட்டு இஷ்டத்திற்கு கணக்கெடுப்பதால் பல்வேறு தவறுகள் நடப்பதுடன் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குறைந்த மின்சாரம் பயன்படுத்துவோரும், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விடியா திமுக அரசு முறையாக ஆய்வு செய்து சரியான தேதியில் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version