பாகிஸ்தானுடனான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமாவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீர மரணமடைந்தனர். இதற்கு பொறுப்பேற்று இருக்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமைப்பு என்பதால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தநிலையில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின்போது பயங்கரவாதத்திற்கு எதிராக இனி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post