வீர மரணம் அடைகிற ராணுவ வீரர்களின், குடும்பத்திற்கு வழங்கும் நிதி உதவியை, 2 லட்ச ரூபாயில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ராணுவத்தில் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு, தற்போது 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த நிதியை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 8 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
ராணுவ போர் விபத்து நல நிதியத்தில் இருந்து, இந்த நிதி உதவி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் கருணைத்தொகையாக பதவிக்கு ஏற்ப 25 லட்சம் முதல் 45 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.