நாடாளுமன்றத்தில் இன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்றும் ஜூலை ஒன்றாம் தேதியும் பாஜக உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சி, கொறடா உத்தரவை பிறப்பித்துள்ளது. 542 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் பாஜகவுக்கு 303 உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் திருத்த மசோதா, முத்தலாக திருத்த மசோதா, வாகன திருத்த மசோதா போன்றவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புதிய இட ஒதுக்கீட்டின்படி உயர் கல்வி நிறுவனங்களில் 7 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க வகை செய்யும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் அடுத்தடுத்த நாட்களில் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.