அரசியல் கட்சிகளுக்கு, பணமில்லா பரிவர்த்தனை முறையில் நன்கொடை பெற, தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பண பரிமாற்றங்களில் வெளிப்படை தன்மையை பின்பற்ற வேண்டும் என்பதற்காக பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. எஸ்பிஐ வங்கி வாயிலாக தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் விற்பனை தொடங்கயுள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், கடந்த மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் ஒரு சதவிகிதத்திற்கும் அதிகமாக வாக்குவங்கி வைத்திருப்பவர்கள் பத்திரங்கள் மூலமாக நடைகொடை பெறலாம்.