நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
17வது மக்களை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பணப்பட்டுவாடா காரணமாக வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை மட்டும் நிறுத்தி வைத்தது தேர்தல் ஆணையம். இதனிடையே, நாளை வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முடிவுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த, தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கும் சேர்த்து, செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post