சென்னை மாநகராட்சியில் குப்பையை உருவாக்குபவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடிவு

திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, சென்னை மாநகராட்சியில் குப்பையை உருவாக்குபவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தினசரி 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த நிலையில், திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, குப்பையை உருவாக்குபவர்களிடம் கட்டணம் வசூலிக்கவும், நடைமுறையை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, குடியிருப்பு, வணிக வளாகம், உணவு விடுதிகள், மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் என தனித்தனியே கட்டண முறை அமல்படுத்தப்பட உள்ளது. பொது இடங்களில் குப்பையை கொட்டுவது, எச்சில் துப்புவது, குப்பையை எரித்தல் போன்றவைகள் மூலம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அரசாணையை தொடர்ந்து குப்பையை உருவாக்குபவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறை மூன்று மாதங்களில் அமலுக்கு வருகிறது. சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் குப்பையை உருவாக்குபவர்களிடம் கட்டணம் வசூலிக்க முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version