புதிய தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதற்கு, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆலோசனை வழங்குவதற்கான அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக, மத்திய அரசு அமைத்த குழுவின் தேசிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என தெரிவித்திருந்தது. இதற்கான அவகாசம் வரும் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக்களை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில் அளித்தார். ஜூலை 31-ம் தேதி வரை கருத்துக்களை பதிவு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.