கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து, குறிச்சி பிரிவு இட்டேரி பகுதியில் தயாநிதிமாறன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியபோது “அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஜெயலலிதா எங்களுக்கு அம்மா, மோடி எங்கள் அப்பா என்கிறார். என்ன உறவுமுறை பாருங்கள்” என்று பேசியுள்ளார்.
அன்பின் மிகுதியால் தமிழகம் மொத்தமும் அம்மா என்றுதான் புரட்சித் தலைவியை அழைக்கிறது. அப்படியென்றால் அனைத்து குடும்பங்களுடன் இவற்றை இணைத்து தவறாகப் பேசுவாரா தயாநிதி மாறன்?
பொது அமைதியைக் குலைக்கும் நோக்கில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது திமுக. காரணம், இது ஏதோ அறியாமலோ அல்லது அவசரத்திலோ (அவசரத்தில் பேசுவதும் கூட ஏற்புடையதல்ல) பேசியது அல்ல. தெரிந்தே பேசியது.
எப்படியெனில், மேற்கண்ட வசனத்தை பேசிவிட்டு, “இதை நாம் சொன்னால் தவறு என்பார்கள்” என்றும் பேசியிருக்கிறார் தயாநிதி மாறன். தவறு என்று தெரிந்தும் பேசியிருக்கிறார் என்றால் உள்நோக்கம் உள்ளது என்றுதான் பொருள். அண்மைக்காலமாகவே தாய், தாய்மை போன்ற உணர்வம்சங்களை ஒருதுளியும் மதியாது கொச்சைப்படுத்தி அருவறுப்பு அரசியல் செய்வதை தன் அரசியல் குயுக்தியாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.