தமிழகத்தில் தற்போது கிட்டத்தட்ட 14 அணைகள் வறண்ட நிலையில் கவலைக்கிடமாக உள்ளது. தமிழ்நாடு நீர்வளத்துறையின் மேற்பார்வையின் கீழ் 90 அணைகள் இருக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி ஆகும். தற்போது 85.7 டி.எம்.சி நீர் இருப்பு மட்டுமே உள்ளது. மொத்த கொள்ளளவில் இது 38.2 சதவீதம்தான். இதற்கு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததுதான் முழுமுதல் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஜூனில் துவங்கிய பருவமழையால் பல அணைகளுக்கு நீர்வர்த்து கிடைத்து, அவற்றின் கொள்ளளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 24 அணைகள் நீர்வரத்து இன்றி கவலைக்கிடமாக உள்ளது.
தற்போதைக்கு தமிழகத்தில் வறண்ட அணைகள்
திருநெல்வேலியில் மணிமுத்தாறு, தென்காசியில் கருப்பாநதி, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, வண்டல் ஓடை, கன்னியாகுமரியில் பெருஞ்சாணி, மாம்பழத்துறையாறு, திண்டுக்கல்லில் சிறுமலையாறு ஓடை, விருதுநகரில் பிளவக்கல் கோவிலாறு, சாஸ்தா கோவில், ஆனைக்குட்டம், கோல்வர்பட்டி, இருக்கன்குடி இவையெல்லாம் வறண்ட அணைகள் ஆகும்.,
தற்போது வறட்சியின் பிடியில் சில அணைகள் சிக்கியுள்ளன. அவற்றைக் காண்போம்.
கோவையில் உள்ள அப்பர் நிரார், ஈரோடு மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஒரத்துப்பாளையம், திருப்பூரில் உள்ள் உப்பாற், வட்டமலைக்கரை ஓடை, அரியலூர் சித்தாமல்லி, திருச்சி உப்பாறு, கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா நதி, விழுப்புரத்தில் உள்ள வீடூர், தர்மபுரி வறட்டாறு, வேலூரில் உள்ள ராஜதோப்புகனார் மற்றும் இதனைத் தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் எரியும் வேகமாக வறண்டு வருகிறது.
வாய் திறக்குமா திமுக?
இதற்கெல்லாம் மாநில அரசின் நீர்வளத்துறை உகந்த நடவடிக்கையினை முன்கூட்டிய எடுத்து இருந்துருக்க வேண்டும். ஆனால் இந்த விடியா திமுக அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தட்டிக்கழித்தபடியே இருந்திருக்கிறது. மேட்டூர் அணையை திறந்து வைத்து மக்கள் மத்தியில் விளம்பரம் செய்து கொண்ட ஸ்டாலின் அரசு இதற்கு எப்படி தீர்வு காணப்போகிறது என்பது கேள்விக்குறியே. முக்கியமாக தமிழகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அவர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வாய் திறந்து பதில் சொல்வாரா துரை முருகன் என்றும் கூறி வருகிறார்கள். அவர் தேவையில்லாத விசயங்களுக்கு மட்டும்தான் வாய் திறப்பார். இதுபோன்ற மக்கள் காரியங்களுக்கு அவர் என்றைக்கு வாய்திறந்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளுகிறார்கள்.