திண்டுக்கல்லில் கொய்யாப்பழம் விளைச்சல் குறைந்து இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 700 ஏக்கரில் கொய்யாப்பழம் பயிரிடப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு கொய்யா அனுப்பி வைக்கப்படுகிறது. போதிய மழை இல்லாத காரணத்தினாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், கொய்யா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ள விவசாயிகள், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post