குலாப் புயல் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிஷா இடையே இன்று கரையைக் கடக்கிறது

வங்கக் கடலில் உருவான குலாப் புயல் ஓடிஷா-ஆந்திரா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது.

குலாப் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா இடையே, கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 85-ல் இருந்து 95 கிலோமீட்டர் வரை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அம்மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 18 குழுக்கள் முன்னெச்சரிக்கை பணிகளில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, ஒடிசா மாநிலத்தில் 13 குழுக்களும், ஆந்திராவில் 5 குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

 

Exit mobile version