சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும் எனவும், அதன் பிறகு மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 31ஆம் தேதியன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, பிப்.1ஆம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!
-
By Web team
- Categories: வானிலை
- Tags: Bay of BengalChennai Weather Research Centercycloneformedsoutheast
Related Content
விடாது மழை! இன்றும் இடி..மின்னல்...மழை இருக்கிறது!
By
Web team
June 23, 2023
இந்தியாவின் பேரழிவு! வலுக்கும் பைபோர்ஜாய் புயல்!
By
Web team
June 7, 2023
மோகோ புயல்.. நாளை மத்திய வங்கக்கடலில் வலுக்கும்!
By
Web team
May 11, 2023
டெல்டா மாவட்டங்களில் 10ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்!
By
Web team
March 7, 2023
3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!
By
Web team
February 3, 2023