நாட்டிற்காக 50 ஆண்டுகளாக பணியாற்றி வருவது பெருமிதம் அளிக்கிறது என மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி அருண்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் துறைமுக வாயிலில் இருந்து சிம்சன் பெரியார் சிலை வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர். இப்பேரணியை எஸ்.பி.ஐ வங்கியின் பெசன்ட் நகர் கிளை மேலாளர் நாகப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி அருண்குமார்,தேசத்தை பாதுகாக்கும் பணியில் ஐம்பது ஆண்டுகளாக பணியாற்றி வருவது பெருமிதம் அளிக்கிறது என்றும், 3ஆயிரத்து 129 வீரர்களுடன் தொடங்கப்பட்ட இப்பிரிவு 1லட்சத்து 45 ஆயிரம் வீரர்களுடன் தற்போது இயங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.
Discussion about this post