சைபர் குற்றவாளிகளிடம் இருக்கும் நவீன தொழில்நுட்பம் தமிழ்நாடு காவல்துறையில் இல்லை முன்னாள் டிஜிபி ரவி கூறியுள்ளார். மேற்கொண்டு,சைபர் கிரைம் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு பாடங்களை குழந்தைகள் மத்தியில் பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் போலியான சமூக வலைதளங்களை தடை செய்யாவிட்டால் தனிமனித சுதந்திரம் பாதிக்கும் என்றும் அவர் பேசியுள்ளார்.
என்ன நடந்தது?..
ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபியும் தாம்பரம் காவல் ஆணையருமான ரவி தனது பெயரில் போலி முகநூல் அக்கவுண்ட்டில் ராணுவத்தில் பயன்படுத்திய தரமான பர்னிச்சர் பொருட்களை வாங்கி உள்ளதாகவும், அதனை வாங்குமாறு பரிந்துரை செய்தது போல் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த முன்னாள் டிஜிபி ரவி உடனடியாக இது குறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.மேலும், இதுகுறித்து அவரது முகநூலில் பக்கத்தில் இப்படி யாராவது தகவல் அனுப்பினால் அது போலி என்று கருதி உடனே காவல்துறையில் புகார் அளிக்கும்படி பதிவிட்டுள்ளார்.
இது குறித்து முன்னாள் டிஜிபி ரவி பேசியது..
முகநூல் பக்கத்தில் போலியானப் பக்கத்தை உருவாக்கி இராணுவ அதிகாரிக்கு என் பெயரை வைத்து பணம் பறிக்க முயன்று உள்ளார்கள்.
என்னைப் போன்ற அதிகாரிகளின் பெயரை வைத்து போலியாக முகநூல் கணக்கை வைத்து ஏமாற்றி வருகின்றனர், எனது கணக்கின் மூலமாக அவர்களது நண்பர்களுக்கு தகவல் அனுப்புகிறார்கள். நான் ஒரு ராணுவ அதிகாரி இடம் பர்னிச்சர்ஸ் வாங்கினேன் அது மிக குறைவான விலையில் உள்ளது என்று நான் கூறுவதைப் போல் அவர்களையும் வாங்கச் சொல்லி கூறியுள்ளனர்.
இந்த தகவலை எனது நண்பர்கள் என் இடத்தில் கூறியவுடன் நான் குற்றப் பிரிவில் புகார் அளித்தேன். உடனடியாக பேஸ்புக் மெட்டா-விற்கு இமெயில் அனுப்பி புகார் அனுப்பினேன். இதுபோன்ற போலியான கணக்குகளை உருவாக்கிப் பணத்தை பறிப்பது தான் இது போன்ற சைபர் கிரிமினல்களின் நோக்கம்.
ஆகையால், குறிப்பாக என்னைப் போன்று காவல்துறை அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி காவல்துறை அதிகாரிகளின் போலி கணக்கை உருவாக்க முடியாது என்ற மக்களின் நம்பிக்கை இருக்கும் அதை பயன்படுத்தி இவ்வாறு செய்து வருகிறார்கள்,
ஆகையால் இதுபோன்று முகநூலோ அல்லது வேறு ஒரு சமூக வலைதளங்களில் எனக்கு பணம் தேவை என்று கூறும் செய்தி வந்தால் அதை யாரும் நம்ப கூடாது,
இன்று பொதுமக்கள் இடையே இதுபோன்ற சைபர் குற்றங்கள் பெருகி வருகிறது சைபர் குற்றம் என்பது காவல்துறைக்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கிறது, முகநூல் பக்கத்தில் நமது மக்கள் தொகையை விட அதிக கணக்குகள் இருப்பதாக தெரிகிறது ஆகையால் ஒரே நபர் பல கணக்கில் இதை பயன்படுத்தி வருகிறார்கள், இதை கண்காணித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விட்டால் வருங்காலங்களில் சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்களுக்கு தனி மனித சுதந்திரம் என்பதும் பாதிக்கும் அளவுக்கு ஆகிவிடும்,
அது மட்டும் அல்லாமல் ஆபாசமான விஷயங்களை அதில் பதிவிட்டு வருகின்றனர், அதையும் கண்காணித்து சரி செய்ய விட்டால் இளைஞர்கள் கெடுவதற்கான வாய்ப்புகள் உண்டு பெண்களை கடத்தலில் ஈடுபட இந்த முகநூல் பக்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள், விபச்சாரம் செய்யும் தொழிலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆகையால் இவைகளை தடுப்பதற்கு தமிழக அரசு பெரிய அளவிலான ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நாம் பொதுமக்கள் பெருமளவுக்கு பாதிப்புகள் உள்ளாக்கப்படுவோம். பெரும்பாலும் இது போன்ற சைபர் கிரைம் குற்றத்தை முகநூல் மற்றும் இணையதளம் மூலமாக ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள் அவர்கள் தங்களை காவல்துறை பிடிக்க முடியாது என்ற ஒரு சவாலோடு குற்றங்களை செய்து தலைமறைவாக இருக்கிறார்கள்,
சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்..
முகநூல் என்பது இப்பொழுது எல்லாம் அறிவை வளர்த்துக் கொள்ள பயன்படுத்துவதை விட விளம்பரங்கள் மற்றும் தேவையற்ற ஆபாச பதிவுகளை பதிவிடுவதற்கு பயன்படுத்தப்படுவதற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது.
சமூக ஊடகங்களை குறைந்த அளவே பயன்படுத்துவது நல்லது, அதை மீறும் பொழுது அதற்கு அடிமையாகி விடுகிறார்கள், ஆகையால் அவர்களை இதிலிருந்து மீட்பதற்கு கடினமாக இருக்கிறது.
இந்த சமூக வலைத்தளங்கள் என்பது இருபக்கம் கூர்மையுள்ளது ஒரு பக்கம் நன்மையும் என்று மறுபக்கம் தீமையும் உண்டு ஆகையால் இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
சைபர் கிரைம் குற்றங்களை குறித்து ஒரு விழிப்புணர்வு பாடங்களை குழந்தைகள் மத்தியில் பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும், தொண்டு நிறுவனங்கள் அரசாங்கம் இவர்கள் எல்லாம் இணைந்து இதை தடுக்க முன்வர வேண்டும்.
ஆகையால் தேசிய அளவில் அதிரடியான நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே இவைகளை தடுக்க முடியும்,, உலக அளவிலேயே இப்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது, நேரடியாக ஒரு தாக்குதலை நடத்துவதற்கு பதிலாக இப்பொழுது இணையதளங்கள் மூலமாக பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தி வருகிறார்.
அரசாங்கம் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் காவல்துறையில் சட்டம் ஒழுங்குக்கு தனி காவல் நிலையம் இருப்பது போல் சைபர் குற்றத்திற்கும் ஒரு காவல் நிலையம் ஒவ்வொரு இடத்திலும் செயல்பட வேண்டும்.
சைபர் குற்றங்களை செய்யும் குற்றவாளிகளிடம் இருக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை ஆகையால் அவர்களை விட நம் தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும். மேலும் தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்த நிறுவனங்களில் இருந்து நாம் அவர்களை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது இருக்கக்கூடிய டிஜிபி தொழில்நுட்பத் படித்து அதை சார்ந்த இருக்கக்கூடியவர் ஆகையால் இந்த சைபர் கிரைம் பற்றிய தடுப்பதற்கு அவர் முயற்சி செய்ய வேண்டும் இதில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.