ஜூன், ஜூலை மாதத்திற்கான 33.19 டிஎம்சி நீரை வழங்க காவிரி நதிநீர் ஆணையம்,கர்நாடக அரசுக்கு உத்தரவு

தமிழ்நாட்டிற்கு 33 டிஎம்சி தண்ணீரை திறந்து விட, கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 12-ஆவது கூட்டம், அதன் தலைவர் ஹெல்டார் தலைமையில், காணொலி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, காவிரியில் உரிய நீரை கர்நாடகா வழங்கவில்லை என தமிழ்நாடு சார்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, ஜூன் மாதத்திற்கான 9 டிஎம்சி மற்றும் ஜூலை மாதத்திற்கான 24 டிஎம்சி தண்ணீரையும் வழங்க, கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனிடையே, மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்க கர்நாடக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு தமிழ்நாடு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


Exit mobile version