புதுடெல்லி :
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த அதிமுக மாநிலங்களவை எம்பி சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் அளித்த நேர்காணல் பின்வருமாறு உள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் சம்பந்தமாக அங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆளும் கட்சியினரின் அராஜக போக்கையும், காவல் துறையினரின் மெத்தனத்தையும் குறிப்பாக ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்களார் பட்டியிலில் உள்ள முறைகேடுகளையும் மோசடிகளையும் குறித்து கடந்த 03/02/2023 அன்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தோம். இத்தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கையானது 2,26,876 பேர் என்று புள்ளிவிவரங்கள் சொல்கிறது. ஆனால் கொடுக்கப்பட்ட வாக்களார் பட்டியலில் பெரும்பாலனவர்கள் அந்த முகவரியிலே இல்லை. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலே இடம் பெற்றிருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் வாக்களரின் பெயர் இடம்பெற்று இருக்கிறது என்று புகார் பட்டியலைக் கொடுத்திருந்தோம். இப்புகாரின் மீது விசாரித்து ஆவணம் செய்வதாக தேர்தல் ஆணையத்தினர் கூறியிருந்தார்கள்.
238 வாக்குச்சாவடிகள் உள்ள ஈரோடு கிழக்குத்தொகுதியில் உள்ள வாக்காளர்களை எங்கள் அதிமுகவினர் நேரடியாக ஆய்வு செய்து 40,000 போலி வாக்காளர்கள் இருப்பதனை உறுதி செய்தோம். இந்த உறுதிப்பட்டியலினை கடந்த பத்தாம் தேதி ஆதரத்துடன் நாங்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துவிட்டோம். அதன் முழு சாராம்சத்தை தற்போது இன்றைக்கு நாங்கள் தலைமை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளோம். திமுக தனது அதிகாரத்தையும் அராஜகத்தையும் பயன்படுத்தி ஜனநாயகத்தை மீறியும் தேர்தல் விதிகளை மீறியும் உள்ளனர் என்று அதிமுக மாநிலங்களவை எம்பி சிவி சண்முகம் குற்றம் சாட்டினார்.