பெரும்பாக்கத்தில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!

சென்னை பள்ளிகரணையை அடுத்த பெரும்பாக்கத்தில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பரூக் உள்ளிட்ட ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும்பாக்கம் எழில்நகரில் கடந்த 5ம் தேதி பரூக் என்னும் ரவுடி, தனது நண்பர்களுடன் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இவர்கள் கோட்டூர்புரம்,மவுண்ட்ரோடு, ஆயிரம் விளக்கு பகுதிகளைச் சேர்ந்த ரவுடிகள் என்று கூறப்படுகிறது. இளம் வயதிலேயே பொதுமக்களை மிரட்டும் வகையில் பிறந்த நாள் கேக் வெட்டிய பரூக் மீது பள்ளிகரணை, சேலையூர், செம்மஞ்சேரி, நீலாங்கரை, ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 18 ம் தேதி கேக் வெட்டிய 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பரூக் கும்பலை பள்ளிக்கரணை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version