கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள எஸ் வங்கியில், 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.
வாரா கடன்கள் பெருகியதை அடுத்து யெஸ் வங்கியின் மூலதனம் முடங்கி கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அந்த வங்கியின் மொத்த நிர்வாகக் கட்டுப்பட்டையும் ரிசர்வு வங்கி தன்வசப்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த எஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு பணத்தை எடுப்பதற்காக அதன் கிளைகளிலும், ஏடிஎம் மையங்களிலும் குவிந்தனர். மேலும், அந்த வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வைப்புத்தொகையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் எஸ் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.