மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு சேவைகளுக்கான தடை தொடர்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்வதாகவும், திரையரங்கம், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பார்கள் செயல்பட தொடர்ந்து தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதவழிபாட்டு தலங்கள் மே 3ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் எனவும், சமூக விழாக்கள் மற்றும் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளி, கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்படுவதாகவும், இறுதிச்சடங்கில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ தேவைக்கு தவிர, பிற காரணங்களுக்காக ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டத்துக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்வோர் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
Discussion about this post