கடலூர் மாவட்டம் பரதூர் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், நெடு நாட்களாக மழை நீர் தேங்கியிருப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கீரப்பாளையம் அருகே பரதூர் ஊராட்சியில்,400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சிவராஜ் நகர் உள்ளிட்ட நான்கு தெருக்களில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றிலும் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதன்காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ள
அப்பகுதி மக்கள், குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.