கடலூரில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் பயன்பாட்டிற்கு வந்தன! பொதுமக்கள் மகிழ்ச்சி!

admk period bridge

கடலூர் மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் தற்போது பயன்பாட்டிற்கு வந்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புவனகிரி அருகே உள்ள கே.ஆடூர், பூங்குடி ஆகிய இரு கிராம மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த அதிமுக ஆட்சியில் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் முதல் பாலமானது கே ஆடூர் கிராமம் செல்லும் முகப்பிலும், மற்றொரு பாலம் பூங்குடி கிராமம் செல்லும் முகப்பிலும் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. இருகிராம மக்களின் 40 ஆண்டு கால கனவான பாலங்கள், பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version