திருவாரூர் அருகே தண்ணீரின்றி கருகிய குறுவை பயிர்களை உழுது அழித்த விவசாயிகள், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பி.ஆர். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி அருகே மணலி பரப்பாகரம் கிராமத்தில், சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைத்தெளிப்பு மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர். ஆனால், ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் சென்றதால் குளம், குட்டைகளில் இதுவரை தண்ணீர் நிரம்பாததால், சாகுபடி செய்த குறுவை பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் வேதனை அடைந்த விவசாயி, சாகுபடி செய்திருந்த பயிர்களை டிராக்டர் மூலம் உழுது அழித்தார். கடன் வாங்கி குறுவை சாகுபடி செய்தும் தண்ணீரின்றி பயிர்களை காப்பாற்ற முடியவில்லை எனவும், தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்த விவசாயிகள், விடியா அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.