சாலை விபத்துகள் குறித்த தகவல்களை காவல்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி உதவ வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன்வரும் நபர்களிடம் எவ்வித கேள்வியும் கேட்கப்படாது என்றும், அவரிடம் பணத்தை செலுத்த மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து தொடர்பான எந்தவித சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கும் அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post