சென்னை வியாசர்பாடி அருகே கம்பெனி அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பளம் தராமல் இழுத்தடித்ததால் கம்பியால் அடித்து கொன்றோம் என்று வடமாநில வாலிபர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்…
சென்னை வியாசர்பாடி பெரியார் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் இவர் அம்பத்தூர் வானகரம் ரோடு அருகே சேண்ட் ப்ளாஸ்ட் என்கிற தொழிற்சாலையை நடத்தி வருகிறார். கடந்த 22ஆம் தேதி கம்பெனியின் உள்ளே ஓய்வறையில் பிரபாகரன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த பிரபாகரன் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கம்பெனியில் வேலை பார்த்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 17 வயதான ஜித்தேந்தர் மற்றும் 19 வயதான ரோசன் ஆகியோர் கம்பெனியில் இருந்து மாயமானதால். இவர்கள் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று
ஆய்வாளர் விஜயராகவன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் கடந்த 23ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் பிஹாரில் இருக்கும் நாலந்தா மாவட்டத்திற்குட்பட்ட பகுதிக்குச் சென்று அங்கு முகாமிட்டு அவர்களை கைது செய்தனர்.
சென்னைக்கு அழைத்து வந்தனர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உடல் நலக்குறைவு காரணமாக பிஹார் இளைஞர்கள் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று சம்பளத்தை பணத்தை பிரபாகரனிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு பிரபாகரன் தரமறுத்ததுடன் அவர்களை திட்டியும் உள்ளார். இதில் ஆத்திரமடைந்த வடமாநில இளைஞர்கள் மதியம் பிரபாகரன் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கும் போது பிரபாகரனின் தலையில் இரும்புகம்பி கொண்டு மூன்று முறை ஓங்கி அடித்துக் கொன்றுவிட்டு அவரது மணி பர்சில் இருந்த 1500 பணமும் பீரோவில் இருந்த 1,00,000 பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியது கூறினார். கொலை நடந்த 7 நாட்களில் பீகார் சென்று குற்றவாளிளை பிடித்த தனிப்படை காவல்துறையினர் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வெகுவாக பாராட்டினார்.