நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யக் கோரிய தொடரப்பட்ட மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். பெரியார் பற்றி பொய்யான தகவலை கூறிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறை ஆணையர் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, இரண்டாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரோசலின் துரை முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். வேண்டுமென்றால் நடிகர் ரஜினிகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரலாம் என நீதிபதி பரிந்துரை செய்தார்.
Discussion about this post